google

Monday, 20 June 2016

சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா இறந்து ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது. சமீபத்தில் அவர் வாரந்தரி ஒன்றுக்கு அளித்து வந்த கேள்வி - பதில் தொடரின் பகுதியைப் படிக்க நேரிட்டது. அதிலிருந்து சில சுவாரஸ்யமானவற்றை இங்கு தருகின்றேன். முதல் கேள்வி - பதில் பரிசல்காரருக்கு சமர்ப்பணமாகுக,... ;-)

இரா. கல்யாணசுந்தரம், மதுரை-9.

மதுரையில் ஒரு கருத்தரங்கில் மெர்வின் (தன்னம்பிக்கை நூல் வெளியிடுபவர்) பேசுகையில் 'மதுரைக்காரரா கொக்கான்னேன்' என்று பல தடவை கூறினார். 'கொக்குக்கு என்ன சிறப்பு?' 

கொக்கு உறுமீன் வரும் வரையில் வாடியிருப்பது போல், மதுரைக்காரர்கள் தகுந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பார்கள் என்று சொல்லியிருப்பார். எனக்குத் தெரிந்து நிஜமாகவே மதுரைக்காரர்கள் பொறுமையாகக் காத்திருந்து, வேளை வந்ததும் 'லபக்' என்று கொத்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள். 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று தனிப்பாடல் ஒன்று உண்டு. ஆகாத கொக்கை சித்தர் ஒருத்தர் வெறும் கண்ணாலேயே பார்த்து எரித்தாராம். அது போல் பத்தினி ஒருத்தியைக் கோபம்கொண்டு அவர் பார்த்தபோது, 'அப்படியெல்லாம் என்னை பஸ்மம் பண்ணிவிட முடியாது. நானா கொக்கான்னேன்‘ என்று அந்த சித்தரைப் பார்த்து பத்தினி டபாய்த்ததாகக் கேள்வி.

அ. சுஹைல் ரஹ்மான், திருச்சிராப்பள்ளி-21.

இதுவரை ஏற்பட்ட 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது எது? அதன் விளைவுகள் என்ன? 'ட்ஸூனமி' என்று டி.வி-யில் சொன்னார்களே...?

'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம். ஒரு ஏரியில் கல் போட்டால் அலை எழுகிற தல்லவா.. அதே போல கடலில் ஏற்படும் அலைத்தொடர். கல் வெளியிலிருந்து வருவதல்ல.. கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பத்தின் விளைவு. இதனால் எழும் அலையின் வேகம் 200 மைலுக்கு மேல். ஜூலை 1958-ல் அலாஸ்காவில் எழுந்த (ட்)ஸூனமி அலை உயரம் 1720 அடி. இதுதான் ரிக்கார்டாம். இந்த ராட்சத குலுக்கல் அலையிலிருந்து தப்பிக்க ஊரை
ஒட்டி பிரமாண்ட அளவில் சுவர் எழுப்பி வைத்து... தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களும் உண்டு. பூகோள ரீதியாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் இது திரும்பத் திரும்ப வருகிறது.

ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.
பெரும்பாலான தமிழ் இணைய பக்கங்களை யுனிகோடுக்கு மாற்றுவதாகச்
சொல்கிறீர்களே.. கொஞ்சம் விளக்குங்களேன்.. ப்ளீஸ்..!

யுனிகோடு என்பது உலகின் அத்தனை மொழிகளையும் கணிப்பொறியில் டிஜிட்டலாக சேர்த்து வைக்க ஏற்பட்ட குறியீடு. ஒவ்வொரு மொழிக்கும் 16 பிட் நீளமுள்ள தகவல் புலத்தை ஒதுக்கிச் சீரமைத்துள்ளது யுனிகோடு கன்ஸார்ட்டியம் என்னும் சர்வதேச அமைப்பு. இதில் இந்திய மொழிகளுக்கான ஒதுக்கீட்டை கேட்கும்போது தமிழுக்கு தரப்பட்ட இடங்களில் சில விரயமாகத் தரப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாலு 'க' நமக்குத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கு நாலு வகை இருக்கும். வேறு இந்திய மொழிகளை மனதில்கொண்டு இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் போல. ஆனால், தமிழுக்கு இது தேவையில்லை. மிச்ச மூன்று இடத்தை வேறு எழுத்துகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதுதான் நம் வாதம். இதில் கருத்து வேறுபாடுகளும் உண்டு.


எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்!

சு. இளையவன், பிரமநாயகபுரம்.
திருக்குறளில் காமத்துப்பால் பகுதியைப் பத்தாம் வகுப்புக்கு மேலாவது பாடத் திட்டத்தில் சேர்க்கலாமே... புறக்கணிப்பது ஏன்?

சேர்க்கலாம்தான்.

'விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு'

போன்ற குறள்களைச் சொல்லிக் கொடுக்க டீச்சர் என்ன செய்வார்? 'விளக்கை அணைத்து இருளுக்கு காத்திருப்பதுபோல், கணவனின் அணைப்புக்கு காத்திருக்கிறது பசலை' என்றால் வகுப்பு சற்று டென்ஷனாகிவிடாதா?


இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் சிறுவர்-சிறுமியர் களுக்கான தந்திரக் கதைகளுக்கும் காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள வரவேற்பு இந்தியாவில் இல்லாததற்குக் காரணம் என்ன?

இவ்வாறான தந்திரக் கதைகளுக்கு மேல்நாடுகளில் உள்ள வரவேற்பு இந்தியாவிலும் உள்ளது. ஆனால் இந்த வரவேற்பு ஆங்கிலத்தில் படிக்கும் மேல்தட்டுக் குழந்தைகளுக்கு மத்தியில்தான்! அண்மையில் வெளியான 'ஹாரி பாட்டர்' கதை இந்தியாவிலேயே ஒரு லட்சம் பிரதி விற்பனை ஆயிற்றாம். தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் அவ்வாறான கதைகளும் படக் கதைகளும் கிடைத்தால் நிச்சயம் ஆர்வத்துடன் படிப்பார்கள். எழுதத்தான் ஆளில்லை.


கி. முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...

இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது. கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் தெரியும்.




கே. அபிஷேக், மேலகபிஸ்தலம்.
ஒரு உயிர்கூட சேதமில்லாமல் நடந்த உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி எது சார்?

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.



நீடூர் நவாஸ், பாங்காக்.

பாங்காக்கிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்தில் பர்மா எல்லையில் 'மேஸோட்' என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஓர் இடத்தில் Magic Hill என்ற போர்டு வைத்து ரோட்டில் மார்க் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காரை
நிறுத்திவிட்டு, நியூட்ரலில் போட்டு இன்ஜினை ஆஃப் செய்துவிட்டாலும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 150 அடி தூரத்துக்குச் செல்கிறது. இத்தனைக்கும் மேடான பாதை அது. அதேபோல் திரும்பி வரும்போது அந்த கோட்டுக்கு
அருகில் காரை நிறுத்தினால், கார் அப்படியே பின்னோக்கி மேட்டில் தானாகவே ஏறுகிறது. அந்த 150 அடி தூரத்தில் அப்படி என்ன புவிஈர்ப்பு மாற்றம் நிகழ்கிறது? புரியலையே சார்!

இதே போல் கலிஃபோர்னியாவில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. சரிவோ, ஏறுமுகமோ பக்கத்தில் இருக்கும் கட்டடம் அல்லது மலை அதை ஒப்பிடும்போது, சரிவு மேடு மாதிரித் தோன்றும். இதை Perspective Dodge என்பர். எக்காரணம் கொண்டும் புவிஈர்ப்பை நம்மால் மீற முடியாது. அடுத்த முறை அங்குபோகும் போது ஒரு ஸ்பிரிட் லெவலை (கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் ரசமட்டக் கோல்) எடுத்துப் போய் அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.

1. 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது 'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம்.


2. இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...
இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது.


3. பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; ந‌ம்மைவிட 50 மடங்கு அதிக அளவில் 'ரிசெப்டர்' செல்கள் உள்ளன். நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது.


4. ஒரு மலைப்பாம்பு எலியை விழுங்க முதலில் அந்த எலியை ஒரு சுருட்டுச் சுட்டி அழுத்தும். அப்போதே எலி மயக்கம் ஆகிரது. பிறகு பாம்பு வாயை 140 டிகிரி திறந்து எலியை வயிற்றுக்கு அனுப்பும்.19 மணி நேரம் எலி ஜீரணமாகமல் இருக்கும். ( எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கண்டு பிடித்து இருக்கிரார்கள் )

a. எலியின் தலை ஜீரணம் ஆக 2 நாள் ஆகும்.
b. 4 நாள் கழித்து அதன் ரோமங்கள் உரியும்.
c. 6 நாள் கழித்து எலும்பு மட்டும் தான் பாக்கி.
d. குடலுக்கு சென்று அதுவும் முழுவதும் ஜீரணமாக 2 வாரம் ஆகும்.

படிக்கும் போது நமக்கு சும்மா அதிருது இல்ல....


5. பூமியின் வயது என்ன தெரியுமா? சுமார் நானூறு கோடி வருஷங்கள்!( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 29ம் பக்கம்.)


6. கொசுக்கலில் பெண் கொசுதான் மனிதனை கடிக்கும். அதற்க்கு முட்டையிடும் சக்திக்கு புரோட்டீன் கலந்த ரத்தம் தேவை. அதனால் மனிதன் வெளியிடும் மூச்சில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வைத்தே 50 அடி தூரத்தில் கண்டு பிடிக்கும்.நம் சருமத்தில் இருந்து வரும் 'லாக்டிக்' அமிலம் அதற்க்கு பரிச்சியம். அந்தா ரத்தம் அதற்க்கு ஒரு வாரம் தாங்கும். அதுபோல் 3 மடங்கு மூக்கு ஸ்ட்ராவால் ஜிவ்வும்.
உலகில் மொத்தம் 3000ம் வகை கொசுக்கள் உள்ளன்.


7. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில் CMC - யை ( Carboxy methyl cellulose )கெட்டியாக்குவதற்க்கும், நிலைப்படுத்துவதற்கும் சேர்க்கப்படும் பொருள்.


8. தங்க நகையை விட பிளாட்டினம் விலை அதிகம்.பிளாட்டினத்தை விட ரேடியம் தான் இன்னும் விலை அதிகம். ஒரு கிராம் 50,000 ரூபாய் கிட்ட விற்க்கிரது. ( இது 2004 வருடம் இடப்படது. )அப்போதே. பிளாட்டினம் மிகவும் உறுதியானது. பார்க்க சிம்புலானது.


9. தங்கத்தை விட பாம்பின் விஷம் விலை மதிப்பு அதிகறிக்க காரணம், பாம்பின் விஷத்தில் இருந்து எடுக்கப்படும் ஸீரம், பாம்பு கடிக்கு மாற்று மருந்து. அந்த விஷத்தில் இருந்து தயாரித்த ரிஸர்பின் போன்ற மருந்து ரத்த அழுத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு துளி விஷம் தங்கத்தின் விலையை விட அதிகம் தான்.

நல்ல பாம்பின் விஷம் ந்யூரோபாக்ஸின் வகைப்பட்டது. கட்டு விரியானின் விஷத்தில் ஹீமோடாக்ஸின் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கு குணமாக்க உகந்தது.


10. ஜரோப்பாவின் மாமியார் என்று டென்மார்க் நாட்டை அழைப்பதுக்கு காரணம் டென்மார்க் நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடாக அதன் பொருளாதாரத்தைக் கட்டுப்பத்தவல்ல சாம்ராஜ்யமாக உருவெடுத்துக் கொண்டிருப்பதே. 


ஒரு உயிர்கூட சேதமில்லாமல் நடந்த உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி எது?


 உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க் சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில் மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம் இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.


இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி... 

இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது. கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் தெரியும்.



சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ? பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் காற்று இல்லை. பாங்காக்கிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்தில் பர்மா எல்லையில் 'மேஸோட்' என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஓர் இடத்தில் Magic Hill என்ற போர்டு வைத்து ரோட்டில் மார்க் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு, நியூட்ரலில் போட்டு இன்ஜினை ஆஃப் செய்துவிட்டாலும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 150 அடி தூரத்துக்குச் செல்கிறது. இத்தனைக்கும் மேடான பாதை அது. அதேபோல் திரும்பி வரும்போது அந்த கோட்டுக்கு அருகில் காரை நிறுத்தினால், கார் அப்படியே பின்னோக்கி மேட்டில் தானாகவே ஏறுகிறது. அந்த 150 அடி தூரத்தில் அப்படி என்ன புவிஈர்ப்பு மாற்றம் நிகழ்கிறது? புரியலையே சார்! இதே போல் கலிஃபோர்னியாவில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. சரிவோ, ஏறுமுகமோ பக்கத்தில் இருக்கும் கட்டடம் அல்லது மலை அதை ஒப்பிடும்போது, சரிவு மேடு மாதிரித் தோன்றும். இதை Perspective Dodge என்பர். எக்காரணம் கொண்டும் புவிஈர்ப்பை நம்மால் மீற முடியாது. அடுத்த முறை அங்குபோகும் போது ஒரு ஸ்பிரிட் லெவலை (கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் ரசமட்டக் கோல்) எடுத்துப் போய் அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள். தவளையின் கண் அமைப்புத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியுமானால், அதைப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சிமுதலிய துறைகளில் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஒரு பழைய பத்திரிகைத் துணுக்கில் படித்தேன். தவளைக் கண்ணில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? தவளையின் கண்களில் சிறப்பம்சம் எனக்குத் தெரிந்தவரை அவைகள் இரையை முழுங்குவதற்கும் கண்கள் உதவுகின்றன என்பதே. ஒரு பூச்சியை நாக்கை நீட்டி ஒட்டவைத்து உள்ளே தள்ளும்போது கண்களும் உள்ளே சென்று, சாப்பிட்டதை தொண்டை வழியாகத் தள்ள உதவுகின்றன. நாம் பாதாம் அல்வா முழுங்கியபின் ஒரு நிமிஷம் அதன் டேஸ்ட்டை ரசிக்க கண்ணை மூடிக் கொள்வதில்லையா? மேலும் அவைகள் ஏறக்குறைய 270 டிகிரி சுற்றிப் பார்க்கவல்லவை.


பரிணாம வளர்ச்சியில் தற்போதைய கடைசி நிலை ஆறறிவு படைத்த மனிதன் என்றால், நமக்கு அடுத்த நிலை ஏழாவது அறிவு என்னவாக இருக்கும்?


ஏழாவது அறிவு என்றால் அது அறிவியல்தான். மனிதன் தன் கண், காது, மூக்கு போன்ற அவயங்களின் திறமையை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நீட்டித்திருக்கிறானே. டெலஸ்கோப், மைக்ராஸ்கோப், சாட்டிலைட், டெலிவிஷன் மூலம் பார்வையை நீட்டித் திருக்கிறான். ஏரோப்ளேன் மூலம் பறக்க முடியாததைப் பறக்க வைத்திருக்கிறான். மெஷின்கள் மூலம் கைகளின் திறமையை நீட்டித்திருக்கிறான். கம்ப்யூட்டரின் மூலம் மூளையின் திறமையை! ஏழாவது என்ன.. எட்டு, ஒன்பது, பத்து என்று எங்கேயோ போய்விட்டான்.




தற்போது பிளாட்டினம் நகைகள் பரபரப்பாகப் பேசப்படுகிறதே, தங்கத்தைவிட பிளாட்டினம் எந்தவகையில் உசத்தி?

பிளாட்டினம் சங்கிலிகள் ஒற்றை வைரத்தை பென்டென்ட்டாக அணிந்துகொள்ள தற்போது பணக்காரர்களால் விரும்பப்படுகிறது. அது தங்கத்தைவிட விலை அதிகமானது. அதேசமயம் ரோடியம்தான் இன்னும் அதிக விலை. ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய்க்குக் கிட்டே.. பிளாட்டினம் மிக உறுதியானது. பகட்டில்லாமல் அணிவதற்கு ஏற்ற நகை. கழுத்தில் என்ன என்று யாராவது கேட்டால் பிளாட்டினம் செயின் என்று பதில் வந்தால் வாயைப் பிளக்கவும்.